கனமழை எதிரொலி! பள்ளிகளுக்கு விடுமுறை! பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் சில முக்கிய பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. பள்ளிகல்லூரிகளுக்கு சில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.
முதலில் சென்னை பல்கலைக் கழக தேர்வுகள் கனமழை காரணமாக இன்று ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது. அடுத்ததாக வேலூரை மையமாகக் கொண்டு இயங்கும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சார்பில் நடக்கவுள்ள இன்றைய தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
அதேபோல, இன்று அதிகாலை முதல் வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், அம்மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.