ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : இன்று சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது விசாரணை

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அமலாக்கத்துறை வழக்கில் திகார் சிறையில் உள்ளார்.முதலில் இவரை சிபிஐ கைது செய்த நிலையில் சிபிஐ வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டது.இதேவேளையில் அமலாக்கத்துறையில் சிறையில் உள்ள நிலையில் சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவில் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது.
இதனால் சிதம்பரம் தரப்பில் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.நேற்று அந்த மீதான விசாரணை நடைபெற்ற நிலையில் சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்று ஒத்திவைப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.இதனால் இன்று சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025