#BREAKING : சிதம்பரத்திற்கு காவல் நீட்டிப்பு -நீதிமன்றம் உத்தரவு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும்,காங்கிரசின் மூத்த தலைவருமான சிதம்பரத்தை முதலில் கடந்த ஆகஸ்ட் 21 -ஆம் தேதி சிபிஐ கைது செய்து விசாரணை மேற்கொண்டது. இந்த சமயத்தில் அமலாக்கத்துறை ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தை கைது செய்தது.இதனிடையே சிதம்பரம் தரப்பில் சிபிஐக்கு எதிரான வழக்கில் ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தார்.அந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.ஆனாலும் சிதம்பரம் அமலாக்கத்துறை வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரது காவல் இன்றுவரை நீட்டிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து திகார் சிறையில் உள்ள அவருக்கு இன்றுடன் காவல் முடிவடைந்த நிலையில்டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.இதில் சிதம்பரத்திற்கு டிசம்பர் 11-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025
பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல்…உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம்!
April 23, 2025