7 முறை விக்கெட்டை பறித்த யாசிர் ஷாவுக்கு சவால் விட்ட சுமித்..!
பாகிஸ்தான் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது.கடந்த 21-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது.இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவன் சுமித் நேற்று அளித்த ஒரு பேட்டியில், அப்போது பிரிஸ்பேனில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷாவின் பந்து வீச்சில் 4 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தேன்.
நான் எனது விக்கெட்டை இழந்ததும் யாசிர் ஷா அவர் 7 விரல்களை உயர்த்தி காட்டினார். முதலில் அது எனக்கு என்னவென்று தெரியவில்லை. பிறகு தான் தெரிந்தது அவரது பந்து வீச்சில் இதுவரை நான் 7 முறை விக்கெட்டை இழந்து உள்ளேன் என்பது தெரியவந்தது.
உண்மையிலே அவரது பந்து வீச்சில் நான் ஒரு முறை அல்லது இரண்டு முறை தான் விக்கெட்டை இழந்து இருப்பேன் என நினைத்தேன். அவரது சைகை இப்போது எனக்குள் உத்வேகம் அதிகரித்து உள்ளது.
அடுத்த போட்டி நாளை மறுநாள் அடிலெய்டில் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் எனது விக்கெட்டை நிச்சயம் எளிதாக இழக்க மாட்டேன் என கூறினார்.