போக்குவரத்து கழக ஊழியர்கலுக்கு ஊதியம் பிடித்தம்!
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து கழக ஊழியர்கள் 1,10,000 பேருக்கு 7 நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஊதிய உயர்வு, ஓய்வூதியப் பலன் உள்ளிட்டவை கோரி, தொமுச, ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கடந்த மாதம் 4ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை 8 நாட்கள் வேலைநிறுத்தப் போராடத்தில் ஈடுபட்டன.
இதனால், அண்ணா தொழிற்சங்கத்தினரும், தற்காலிக ஓட்டுநர்கள் மட்டுமே பேருந்துகளை இயக்கியனர். அப்போது, ஊடகங்களுக்கு பேட்டியளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வேலைநிறுத்தம் செய்யும் ஊழியர்களுக்கு அந்த நாட்களுக்கான ஊதியம் வழங்கப்படாது என்றும், பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அதன்படி, போக்குவரத்து ஊழியர்களுக்கு இன்று வழங்கப்பட்ட ஊதியத்தில் 7 நாள் சம்பளம் பிடிக்கப்பட்டுள்ளது. வேலைநிறுத்தம் 8 நாட்கள் நடைபெற்றாலும், முதல் மற்றும் கடைசி நாட்களில், பாதி நேரமே வேலைநிறுத்தம் நடந்ததால், அந்த 2 நாட்களை ஒரு நாளாகவே கணக்கிட்டு, சம்பள பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறு, போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.