மதுவிலக்கை நோக்கி ஆந்திர அரசு! அசரடிக்கும் அதிரடி நடவடிக்கைகள்!
ஆந்திராவில் தற்போது பொறுப்பேற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டி அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து மக்களின் ஆதரவை பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது குறி வைத்துள்ள திட்டம் ஆந்திராவில் பூரண மதுவிலக்கு. அதற்கு தற்போது முதற்படியாக லைசென்ஸ் கட்டணம் பல மடங்கு உயர்த்தி முதல்வர் திட்டமிட்டுள்ளார். இதுவரை 798 பார் லைசென்சை ஆந்திர அரசு ரத்து செய்துள்ளது. மேலும், மூன்று நட்சத்திர ஹோட்டல் மற்றும் அதற்கு மேல் உள்ள ஹோட்டல்களில் பார் லைசென்ஸ் பெறுவதற்கு 10 லட்சம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால், தற்போது 1.45 கோடி ஆக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது வருடம் 10 சதவீதம் அதிகரிக்க கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் சிறிய அளவிலான பார்களுக்கு லைசென்ஸ் கட்டணம் 5 லட்சத்திலிருந்து பத்து லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு 4380 மதுக்கடைகளைகள் இருந்த ஆந்திராவில் 3500 மதுக்கடைகள் மட்டுமே இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், அந்த 3,500 மதுக்கடைகளையும் அரசே ஏற்று நடத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் படிப்படியாக ஆந்திராவில் பூரண மதுவிலக்கை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், அந்த மதுக்கடைகளில் மது அருந்த அனுமதிக்கப்படுவதில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும், 1.5 கோடி ரூபாய்க்கு மட்டுமே ன், மது கொள்முதல் செய்ய முடியும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.