தமிழக அரசின் கோரிக்கை ஏற்று அணை பாதுகாப்பு மசோதாவை ஒத்திவைக்க மத்திய அரசு ஒப்புதல்..!
குளிர்காலக் கூட்டத்தொடர் மக்களவை மற்றும் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் அணை பாதுகாப்பு மசோதாவை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது.
அணைகள் பாதுகாப்பு மசோதா தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார், தங்கமணி ஆகியோர் மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தையும் , மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்து பேசினார்.
இவர்கள் சந்திப்பின் போது முக்கிய கோரிக்கையாக மத்திய அரசு இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றக்கூடாது கோரிக்கையை வைத்தனர். ஏனென்றால் இந்த மசோதவிற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
பல்வேறு விவகாரங்களில் தமிழக அரசின் நடைவடிக்கைகளுக்கு இந்த மசோதா எதிராக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.தமிழக விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க வேண்டும் தமிழகம் ஏற்கனேவே கேரள , கர்நாடக மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் நதிநீர் கணக்கிட்டு தொடர்பான பிரச்சனையில் இருக்கும்போது இந்த மசோதா சரியாக இருக்காது.
அதிலும் குறிப்பாக முல்லை பெரியாறு அணை கேரளாவில் இருந்தாலும் அதன் பரம்பரிப்பு தமிழகத்தில் உள்ளது.அணியில் உள்ள நீர் மற்றும் அணையில் இருந்து எடுக்கப்படும் மின்சாரமும் தமிழகம் தான் பயன்படுத்தி வருகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் புது மசோதா மேலும் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக அணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றக்கூடாது என தமிழக அரசு கோரிக்கை வைத்து இருந்தது.
இந்நிலையில் அணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றக்கூடாது என தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மசோதாவை தள்ளிப்போட மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.