அது வதந்தி தான் உண்மை இல்லை-சூரி ..!
தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் நீங்கா இடம் பெற்ற காமெடி நடிகர் சூரி “வெண்ணிலா கபடி குழு” திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.
இந்நிலையில் நடிகர் சூரி தனது சொந்த ஊரான மதுரையில் இரண்டு ஓட்டல்களை திறந்து உள்ளார். இதை தொடர்ந்து நடிகை மீனா சாலி கிராமத்தில் வைத்து இருந்த ஒரு வீட்டை விற்க அவர் முன்வந்த போது அதை நடிகர் சூரி ரூ 6.5 கோடிக்கு விலைக்கு வாங்கி விட்டதாக செய்திகள் வெளியானது.
இது பற்றி சூரியிடம் கேட்டபோது அவர் , மீனாவின் வீடு வாங்கியதாக வெளியான செய்தி வதந்தி தான் தவிர உண்மை இல்லை என கூறியுள்ளார்.