BREAKING: மேலவளவு வழக்கில் விடுதலையான 13 பேருக்கு நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்ற கிளை..!

மதுரை மாவட்டத்திலுள்ள மேலவளவு கிராமத்தில் கடந்த 1996-ம் ஆண்டு பட்டியலின வகுப்பை சார்ந்த முருகேசன் என்பவர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக முருகேசன் உட்பட 7 பேர் 1997 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த படுகொலை வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டது.இந்நிலையில் அண்ணா பிறந்த நாளில் 3 பேருக்கு நன்னடத்தை காரணமாக முன்விடுதலை செய்யப்பட்டனர். மீதமிருந்த 14 பேரில் ஒருவர் இறந்த நிலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீதமுள்ள 13 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
முன்விடுதலை எதிர்த்து வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த 20-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மேலவளவு ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட கொலை வழக்கில் 13 குற்றவாளிகளுக்கு எதன் அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர் என்ற கேள்வி எழுப்பினர்.
அப்போது மனுதாரர் தரப்பில் 13 பேர் விடுதலை செய்யப்பட்ட அரசாணை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்ய அனுமதி கேட்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள் அனுமதி கொடுத்து வழக்கை இன்று ஒத்தி வைத்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வாதங்களை கேட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் மேலவளவு கொலை வழக்கில் விடுதலையான 13 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பியது. அவர்களுக்கு நோட்டீஸ் கொண்டு சேர்ப்பதை மேலூர் டிஎஸ்பி உறுதி செய்யவேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025
சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!
April 29, 2025