தர்பார் திரைப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளியாகும் தேதி அறிவிப்பு
தர்பார் திரைப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் வரும் 27-ஆம் தேதி வெளியாகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்துள்ள படத்தின் பெயர் தர்பார்.இந்த படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். நயன்தாரா,யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது.மேலும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
இந்த நிலையியில் தர்பார் திரைப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் வரும் 27-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது . இந்த பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார் எனவும் படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.