இரண்டு வருடத்திற்கு பிறகு பலத்த பாதுகாப்புடன் இன்று அதிமுக பொதுக்குழு , செயற்குழு கூட்டம்..!

Default Image

ஆண்டு தோறும் நடைபெறும் பொதுக்குழு ,செயற்குழு கூட்டம் இரண்டு வருடங்களுக்கு பிறகு நடைபெற உள்ளது. 2016-ம்  சசிகலா தலைமையில் ஒரு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சசிகலா தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முக்கியமான அறிவிப்புகள் பல வெளியிட்டார்.அதில் துணை பொதுச் செயலாளராக தினகரனை அறிவித்தார்.
அதன்பிறகு  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2017-ம் ஆண்டு நடைபெற்ற  பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன் பிறகு ஏற்பட்ட சில பிரச்சனையாலும் , நாடாளுமன்ற தேர்தல் போன்றவற்றால் பொதுக்குழு ,செயற்குழு கூட்டம் நடைபெறவில்லை.இந்நிலையில் அவை தலைவர் மதுசூதனன் தலைமையில் இன்று நடக்க இருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்காக நான்கு நாள்களாக ஏற்படுகள் செய்யப்பட்டு வந்தனர்.பொதுக்குழு கூட்டத்திற்கு செய்யப்பட்ட ஏற்படுகளை க.பாண்டியராஜன் ,அதிமுக நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள 2,000 மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்தும் , அதிமுக அரசின் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படலாம்.
பேனர் வைக்க தடை என்பதால் இன்று தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கட்சி கொடிகளும் ,பேனர்களும் இடம்பெறவில்லை அதற்க்கு பதிலாக வாழைமரங்கள்  கட்டி அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
திருமண மண்டபத்தில் நுழைவு வாயிலில் பிரமாண்ட யானை உருவங்களும் வைத்து உள்ளனர்.இந்த கூட்டத்தில் முதலமைச்சர் , துணைமுதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் என பலர் கலந்து கொள்ளஇருப்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்