விஷாலின் துப்பறிவாளன்-2 திரைப்படத்தில் நடிகராகவும் களம் காணும் இயக்குனர் மிஷ்கின்!?
அஞ்சாதே, பிசாசு, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், துப்பறிவாளன்-2 போன்ற தரமான படங்களை இயக்கி வந்த இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள சைக்கோ திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படம் டிசம்பர் மாதம் இறுதியில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஷால் ஹீரோவாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் ஆசியா என்ற புதுமுகம் ஹீரோயினாக நடிக்க உள்ளார். மேலும், துப்பறிவாளன் முதல் பாகத்தில் நடித்த பிரசன்னா இதிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மேலும், ரகுமான், கௌதமி, ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தில் மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கினே இந்த படத்தில் நடிக்கவுள்ளாராம். இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தில் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளார்.