டெஸ்ட் : பந்து வீச்சில் பங்களாதேஷ் வீரர்களை மிரட்டி வரும் இஷாந்த் சர்மா..!
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா, பங்களாதேஷ் அணிகளுக்கிடையே நேற்று பகலிரவு டெஸ்ட் போட்டி தொடங்கியது.இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்சில் 30.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 106 ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா 5 , உமேஷ் 3 , மற்றும் ஷமி 2 விக்கெட்டை வீழ்த்தினர். இதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்க்ஸை தொடங்கிய இந்திய அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டை இழந்து 174 ரன்கள் எடுத்தனர்.
இன்று இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. இந்திய அணியில் ரஹானே , புஜாரா ஆகிய இருவரும் அரைசதம் அடித்தார். மேலும் அணியின் கேப்டன் கோலி நிதானமான ஆட்டத்தால் சதம் விளாசி 136 ரன்கள் குவித்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்.
மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.இறுதியாக இந்திய அணி 9 விக்கெட்டை இழந்து 347 ரன்கள் எடுத்து இருந்தபோது இந்திய அணியின் கேப்டன் கோலி டிக்ளர் செய்தார். பங்களாதேஷ் அணியில் எபாதத் ,அல்-அமீன் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டை பறித்தனர்.
இதைத்தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய பங்களாதேஷ் அணி 4 விக்கெட்டை இழந்து 45 ரன்கள் எடுத்து உள்ளது.அதில் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டும் ,உமேஷ் யாதவ் 1 விக்கெட்டையும் வீழ்த்தி உள்ளனர்.