பெரும்பான்மை இருப்பதை ஆளுநர் எப்படி முடிவு செய்தார் ? ரந்தீப் சுர்ஜேவாலா
பெரும்பான்மை இருப்பதை ஆளுநர் எப்படி முடிவு செய்தார் என தெரியவில்லை என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
இன்று மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பத்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவியேற்றார்கள்.திடீரென்று அங்கு அரசியல் மாற்றம் ஏற்பட்ட நிலையில் அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித்பவார் சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபட்டுள்ளார் .தேவேந்திர பட்னாவிஸ்க்கு பெரும்பான்மை இருப்பதை ஆளுநர் எப்படி முடிவு செய்தார் என தெரியவில்லை என்று ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.