உங்களின் முக அமைப்பு இதுவா! இதோ உங்களுக்கு ஏற்ற ஹேர் ஸ்டைல் ..!

Hair Style [file image]

ஆண்களுக்கு அழகுகளில் மிகவும் முக்கியமானது ஆண்களின் முக அழகு ஆகும். முக அழகை பராமதிப்பதில்  தனி நேரம் ஒதுக்க வேண்டிய நிலை உள்ளது. ஏனேன்றால்  மாதம் பிறந்தால் கட்டாயம் செய்ய வேண்டிய சில வேலைகளுக்கிடையில் நம்மை நாம் மெருகேற்றிக்கொள்வதற்கு எடுக்கும் முயற்சிகளும் அடங்கும். அதிலும் பணிக்குச் செல்லும் ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்ள அழகு நிலையங்களை நாடுவது இப்போது ட்ரெண்டாகி வருகிறது.

ப்ளீச்சிங், ஃபேஷியல், பெடிக்யூர், மானிக்யூர், ஹேர்கட் என்று ஏகப்பட்ட பராமரிப்பு சேவைகளை பார்லர்கள் செய்து கொண்டிருக்கின்றன. இதில் அனைவரையும் பார்த்ததும் ஈர்ப்பது நமது ஹேர்ஸ்டைல் தான். செவ்வகம்,  வட்டம், சதுரம், ஹார்ட் ஷேப், ஓவல், டைமண்ட் முக்கோணம் என ஆண்களின் முகவடிவத்திற்கு ஏற்ப ஹேர்கட் செய்தால், ஸ்டைலிஷ் லுக் நிச்சயம்.

செவ்வகம் அல்லது நீள்வட்ட முகம்:

 

முகத்தின் அகலம் மிகவும் குறுகியும், நீளம் அதிகமாக நீண்டும் காணப்படும் வடிவம் நீள்வட்ட முக அமைப்பு. இவர்களின் ஹேர்ஸ்டைல், முகத்தின் அதிகப்படியான நீளத்தைக் குறைக்கும் விதமாக இருக்க வேண்டும். ஷார்ட் ஹேர்கட் இவர்களுக்கான சரியான சாய்ஸ். சைடு வகுடெடுத்த ஸ்டைல், சைடு க்ரூ கட், ப்ரஷ் அப், ஷார்ட் ஸ்பைகி ஹேர்கட் போன்றவை நீளமான முகத்தை சிறிதுபடுத்தும். இவர்களுக்கு அடர்ந்த தாடி மிகப்பெரிய மைனஸ். அது மேலும் முகத்தின் நீளத்தைக் அதிகப்படுத்திக் காட்டும். எனவே க்ளீன் ஷேவ் அல்லது குறுந்தாடி வைத்துக்கொள்ளலாம்.

வட்ட முகம்:

 

வட்ட முகம் உள்ளவர்களுக்கு தாடை பகுதி சிறியதாக இருப்பதால் அவர்களின் தலை பகுதியானது அதிகமாக தெரியும் இதனால் வட்ட முகத்துக்கான பெஸ்டான ஹேர் கட் என்றால் ஹை ஸ்கின் ஃபேட், ஸ்லீக் பேக், பிரிஞ்ச் கட் எனும் ஹேர் கட்டை செய்யலாம். இதனால் தலையின் நடுவில் முடியானது அதிகமாக  காட்டுவதோடு, உங்களது முகமும் ஸ்டைலாக தெரியும். அதே போல தாடியும் சதுர வடிவில் சேவ் செய்தால் முகத்தின் அழகை தூக்கி காட்டும்.

சதுர முகம் :

 

சதுர முகம் உடையவர்களுக்கு முகத்தில் அனைத்து பக்கமும் சமமாக இருக்கும்.  இதனால் இவர்களுக்கான ஹேர் ஸ்டைல் கோம்ப் ஓவர், பஸ் கட் , க்ரூ கட், ஹை பேட் வித் குய்ஃப். இது போன்ற ஹேர் கட் செய்வதனால் சதுர வடிவர்களின் முகம் ஸ்டைலாக இருக்கும். மேலும், இவர்கள் அடர்ந்த தாடி வைப்பதோடு தாடியை கொஞ்சம் குறைந்தால் முகம் இன்னும் அழகாக தெரியும்.

ஹார்ட் ஷேப் முகம் :

 

இது மிகவும் அரிதான முக வடிவமாகும். மிகவும் குறைந்த நபர்களுக்கே இது போன்ற முக வடிவம் இருக்கும் நபர்கள் மிகவும் குறைவாகவே காணப்படுவார்கள். இவர்களுக்கான அருமையான ஹேர் கட்  என்றால் அது நடுவில் வகுடு எடுத்து தலை வருவது தான். இவர்களது தலையின் நடுவானது அகலமாக இருக்கும்.

அதனால் இப்படி வாரும் போது எந்த அளவிற்கு முடி வெட்டலாமோ அந்த அளவிற்கு வெட்டலாம். மேலும் இவர்களுக்கு தாடி கொஞ்சம் அடர்த்தியாக இருந்தால் அது மிகவும் அழகாகவும் அது இவர்களது முகத்தை மேலும் ஸ்டைலாக காட்டும்.

ஓவல் முகம் : 

 

ஓவல் முகம் உள்ளவர்கள்களுக்கு கீழ் தாடை பகுதி மேல் உள்ள தலையை விட கூர்மையாக இருக்கும். இதனால் அவர்களுக்கு எல்லா ஹேர் ஸ்டைலும் சிறப்பாக இருக்கும். ஆனால் முன்னாடி உள்ள முடியயை பிரிஞ்ச் ஸ்டைலில் விடாமல் இருந்தால் மிகவும் அழகாக இருக்கும். அதிலும் கிளாசிக் ஷார்ட் ஹேர் கட், கோம்ப் ஓவர் அண்டர் கட் ஆகும். இவர்களது முகத்திற்கு தாடி இல்லாமலோ இல்லை குறைவாகவோ இருந்தால் மிகவும் அழகாக இருக்கும்.

டைமண்ட் முகம் :

 

இந்த முக வடிவமும் மிகவும் அரிதான முக வடிவமாகும். இந்த முக வடிவம் உடையார்க்கு பின் தலையில் நன்றாக முடி வளர்த்தி அதை கொண்டை போல கட்டி வைத்தால் பார்க்க அழகாக இருக்கும். மேலும், இந்த முக வடிவம் உடையவர்கள் தாடி வைக்க வேண்டும் என்று நினைத்தால் நன்கு அடர்த்தியான தாடி வைத்தால் நன்றாக இருக்கும்.

முக்கோண முகம் :

 

முக்கோண வடிவு கொண்ட முக அமைப்பு உடையவர்களுக்கு அப்படியே ஹார்ட் ஷேப் முகத்திற்கு எதிர்மறையான ஹேர் ஸ்டைல்களை வைத்தாலே நன்றாக இருக்கும். மேலும், இவர்கள் தாடி வைத்தால் அது முகத்திற்கு ஒட்டாமல் இருக்கும்.  அதனால் தாடி வைக்காமலோ அல்லது மிகவும் கம்மியாகவோ தாடி வைத்தாலோ அது மிகவும் அழகாக இருக்கும்.

 

இதில் உங்கள் முக அமைப்பு எது போல உள்ளதோ அதற்கு ஏற்றார் போல் நீங்களும் உங்களுக்கான ஹேர் கட்டை செய்து நீங்களும் அழகாக மாறலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்