கிரிக்கெட் பேட் தலையில் தாக்கியதால் மாணவன் பரிதாப பலி ..!
கேரள மாநிலம் ஆலப்புழா அருகில் உள்ள சுனக்கரா அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நவ்னீத் என்ற மாணவன் 6-ம் வகுப்பு படித்து வந்து உள்ளார். இவர் நேற்று மதியம் உணவு இடைவேளையில் சாப்பிட்டு விட்டு கை கழுவுவதற்காக மைதானம் அருகே உள்ள குழாய்க்கு சென்று உள்ளார்.
அப்போது சிலர் மாணவர்கள் சாப்பிட்டு விட்டு மைதானத்தில் மரக்கட்டையால் செய்த பேட்டை வைத்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத நேரத்தில் பேட்டிங் செய்து கொண்டு இருந்த ஒரு மாணவன் கையில் இருந்த பேட் நழுவி நவ்னீத்தின் தலையின் பின் புறத்தில் தாக்கியது. இதில் நவ்னீத் மைதானத்தில் மயங்கி விழுந்து உள்ளார்.
பின்னர் அங்கு இருந்த மாணவர்கள் ஆசிரியர்கள் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த ஆசிரியர்கள் நவ்னீத்திற்கு முதலுதவி கொடுத்தனர். பின்னர் அருகில் இருந்த உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் தாலுகா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் நவ்னீத் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.