மகாராஷ்டிராவில் அதிகாலையில் திரும்ப பெறப்பட்டது குடியரசுத் தலைவர் ஆட்சி
மகாராஷ்டிராவில் அதிகாலையில் திரும்ப பெறப்பட்டது குடியரசுத் தலைவர் ஆட்சி.
மகாராஷ்டிராவில் இன்று திடீர் திருப்பமாக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக பதவி ஏற்றார்.மேலும் துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சார்ந்த அஜித்பவார் பதவி ஏற்றார்.
இந்த நிலையில் மகாராஷ்டிராவில் புதிய முதலமைச்சர் பொறுப்பேற்றதன் எதிரொலியாக அதிகாலையில் திரும்ப பெறப்பட்டது குடியரசுத் தலைவர் ஆட்சி.நீண்ட நாட்களாக மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் குழப்பம் நீடித்து வந்த நிலையில் அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. சுமார் 10 நாட்களாக அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.