கூட்டணி அமைக்கும் முயற்சி ! கமல்ஹாசனை ஸ்டாலின் சந்தித்தது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
கூட்டணி அமைக்கும் முயற்சியாகவே கமல்ஹாசனை ஸ்டாலின் சந்தித்துள்ளார் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அறுவை சிகிச்சை செய்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலை நேரில் சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்.இந்த நிலையில் இன்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் டெல்லியில் பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் ஸ்டாலின் சந்திப்பு குறித்து கூறுகையில், ரஜினி, கமலுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார்.கூட்டணி அமைக்கும் முயற்சியாகவே கமல்ஹாசனை ஸ்டாலின் சந்தித்துள்ளார்.
மேலும் என்னுடைய தனிப்பட்ட முறையில் நடிகர் கமல்ஹாசன் பூரண உடல்நலம் பெற வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.