நச்சுப்புகை பாதிப்புகளை அறிய மனிதர்களை பயன்படுத்திய பிரபல கார் நிறுவனங்கள்!
வோல்க்ஸ்வேகன் நிறுவனம் டீசல் கார்களில் வரும் புகை மிகவும் நச்சுதன்மையாக இருப்பதால் தனது வாகனங்களை திரும்பப்பெற்றுள்ள நிலையில் தற்போது உள்ள நிலையில் மீண்டும் சர்சையில் சிக்கியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாளிதழ்கள் வெளியிட்ட செய்தியில், டீசல் கார்கள் வெளியிடும் புகையால் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிய கடந்த 2015 ஆம் ஆண்டு போக்ஸ்வேகன் ஆய்வு நடத்தியதாக கூறியுள்ளது. ஆய்வில், குரங்குகளை தனித்தனியாக கண்ணாடி பெட்டிகளில் அடைத்து நச்சுப்புகையை உட்செலுத்தி அபாயகரமான சோதனை செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மனிதர்கள் மீதும் இதுபோன்ற சோதனை நடத்தப்பட்டதாகவும் நாளிதழ்கள் தெரிவித்துள்ளன. பி.எம்.டபள்யூ(BMW), டெய்ம்லெர் ((daimler)) கார் நிறுவனங்கள் மீதும் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.