உலக நாயகனுடன் களத்தில் குதிக்கும் லேடி சூப்பர்ஸ்டார்!
நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தையடுத்து அவர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.இந்நிலையில் இந்த படத்தின் நாயகியாக நயன்தாரா எனத் தகவல் வெளியாகியுள்ளது.
லைகாதயாரிப்பில் கமல் நடிக்கும்‘இந்தியன்-2’படத்தை இயக்க ஷங்கர் தயாராகிவருகிறார். அதற்கு ஆரம்பபுள்ளியாகஷங்கர் சமீபத்தில் இந்தியன் 2 படத்தின் அறிமுகத்திற்காக தைவானில் இந்தியன் 2 என்று எழுதப்பட்ட ஹீலியம்பலூனை பறக்க விட்டார்.
இந்நிலையில்மிகபெரிய பட்ஜெட்டில் உருவாகும்இப்படத்தில் நாயகியாக நயன்தாராவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தைநடந்து வருகிறது. அவர் ஒப்புக் கொண்டால் கமலுடன்,நயன்தாரா நடிக்கும் முதல் படமாக இதுஅமையும். இந்தியன் 2 படத்தில் நயன்தாராவுக்கு புரட்சிப் பெண் வேடம் என்றும்தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரு முக்கிய கதாபாத்திரத்தில்வடிவேலுவும் நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியன் 2 படம்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள் .