மிக்ஸியை விற்று மது குடித்த கணவன்! கட்டையால் அடித்து கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி!

Default Image

திருப்பூர் மாவட்டம் சுல்தான் பேட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் இவரது மனைவி பெயர் உமா தேவி. இவர்கள் திருப்பூரில் ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில் இவர் சில தினங்களுக்கு முன்னர் அவரது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது வீட்டின் அருகேதவறி விழுந்து இறந்துவிட்டார் என வெங்கடேஷ் மனைவி உமாதேவி கூறியுள்ளார். உடனே அவரது உடலை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்தபின்பு, வெங்கடேஷின் பின் தலையில் கட்டையால் அடித்ததன் காரணமாகத்தான் அவர் இறந்துவிட்டார். என பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.
உடேன காவல்துறையினர் இதுகுறித்து தீவிரமாக விசாரணையை தொடங்கினர். அப்போது,  பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதில், வெங்கடேஷ் மது அருந்தும் பழக்கம் கொண்டவர். அன்றைய தினம் மது குடிப்பதற்காக வீட்டில் இருந்த மிக்ஸியை விற்று மது குடித்துள்ளார். இந்த விஷயம் உமாதேவிக்கு தெரியவரவே, வெங்கடேஷிற்கும் உமாதேவிக்கும் சண்டை வந்துள்ளது. இந்த சண்டையின்போது, கட்டையால் வெங்கடேஷின் பின் தலையில் அவரது மனைவி உமாதேவி பலமாக தாக்கியுள்ளார் . இதில் காயமடைந்த வெங்கடேஷ் சம்பவ  இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். உடனே விபத்தில் வெங்கடேஷ் இறந்துவிட்டார் என உமாதேவி நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்