தமிழகத்தின் 33-வது மாவட்டம் உதயமானது ! புதிய மாவட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி
தமிழகத்தின் புதிய மாவட்டமாக தென்காசி உதயமானது.
சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , தமிழக சட்டப்பேரவை விதி 110-கீழ் தென்காசி ஆகியவற்றை புதிய மாவட்டமாக அறிவித்தார். நெல்லையில் இருந்து தென்காசியை பிரித்து புதிய மாவட்டமாக முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்தார்.
இந்த நிலையியில் இன்று தமிழகத்தின் புதிய மாவட்டமாக தென்காசி உதயமானது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
தென்காசி வருவாய் கோட்டங்கள் :
- தென்காசி
- சங்கரன்கோவில்
தென்காசி தாலுகாக்கள்:
- தென்காசி
- சங்கரன்கோவில்
- சிவகிரி
- ஆலங்குளம்
- திருவேங்கடம்
- கடையநல்லூர்
- செங்கோட்டை
- வி.கே.புதூர்