அனைத்து வீரர்களும் டக் அவுட் ..! 754 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி ..!

Default Image

மும்பையில் தற்போது ஹாரிஸ் ஷீல்டுக்காக பள்ளிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று ஒரு போட்டியில் குழந்தைகள் நலப்பள்ளியும் , சுவாமி விவேகானந்தா இண்டர்நேஷனல் பள்ளியும், மோதியது. இதில் இறங்கிய தேர்வு சுவாமி விவேகானந்தா பள்ளி 39 ஓவர்களில் நான்கு விக்கெட் இழந்து 761 ரன்கள் குவித்தது.
சுவாமி விவேகானந்தா பள்ளியில் அதிகபட்சமாக மாயேகர் என்ற மாணவர் 134 பந்துகளுக்கு 338 ரன்கள் குவித்து கடைசிவரை இருந்தார்.அதில் 56 பவுண்டரி , 7 சிக்ஸர் அடக்கும் .கிருஷ்ணா என்ற மாணவர் 95 ரன்கள் குவித்தார்.
இதை தொடர்ந்து இறங்கிய குழந்தைகள் நல பள்ளி 7 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த ரன்களும் 6 ஒய்டு  மற்றும் ஒரு பை எக்ஸ்ட்ரா மூலம் கிடைத்தது. இதனால் விவேகானந்தா பள்ளி 754 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதில் அலோக் பால் என்ற மாணவன் 3 ஓவர்கள் வீசி 6 விக்கெட்டுளை பறித்தார்.
இவர்கள் மும்பை 16 வயதுக்குட்பட்ட அணி முகாமில் உள்ளார்கள் . இந்த பள்ளியின் பழைய மாணவர்களில் ஒருவர் இந்தியா அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்