குடிநீர் பள்ளத்தில் விழுந்த இரண்டரை வயது சிறுமி.. காப்பாற்ற ஆளில்லாதால் உயிரிழந்தது..!
காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் அருகே உள்ள கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி உள்ளது, பனையூர் கிராமம். இந்த கிராமத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள மக்கள், மூன்றிலிருந்து ஐந்து அடி வரை பள்ளம் தோண்டி அதில் இருந்து அப்பகுதி மக்கள் தண்ணீர் எடுத்து வந்தனர்.
இந்நிலையில் பகுதியில் நேற்று பெய்த மழையால் அந்தப் பள்ளத்தில் நீர் நிறைந்திருந்தது. அருகாமையில் விளையாடிக்கொண்டிருந்த அப்பகுதியை சேர்ந்த இரண்டரை வயது குழந்தை சஞ்சீவீனா, அந்தப் பள்ளத்தில் தவறி விழுந்தது.
நீண்ட நேரமாகியும் குழந்தையை காணவில்லை என பெற்றோர்களும் அப்பகுதி மக்களும் தேடி வந்தனர். நீண்டநேரமாகியும் அந்த குழந்தை கிடைக்கவில்லை. இந்நிலையில் அந்த குடிநீர் பள்ளத்தில் பார்க்கையில், அந்தக் குழந்தை நீரில் மூழ்கி இருப்பது தெரியவந்தது.
உடனடியாக குழந்தையை மீட்டு அக்கம்பக்கத்தினர், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த குழந்தை இறந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.