உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து பாஜக தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் -அமைச்சர் கடம்பூர் ராஜு
உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து பாஜக தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகத்தில் பாஜக தலைவர் இல்லாததால் உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து டெல்லியில் உள்ள பாஜக தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் . விடுதலைப் புலிகள் விவகாரத்தில் திமுக இரட்டைவேடம் போடுவது தெரிந்த விஷயம்தான்.
மக்கள் பிரதிநிதி என்ற முறையில் திருமாவளவன் முதலமைச்சரை சந்தித்தார்.எனினும் திமுக கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் இனி அதிமுக தலைமையை ஏற்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.