அஜித்தின் அடுத்தடுத்த அதிரடிகள் ஆரம்பம்

Default Image

‘தல’ அஜித்குமார் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். இதன்மூலம் அஜித் சிவா கூட்டணி வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து நான்காவது முறையாக இணைந்து உள்ளனர்.
இந்த படத்தில் அஜித் தனது சால்ட் அண்ட் பெப்பர் லுக்கை துறந்து இளமையான தோற்றத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்து யார் இயக்கத்தில் தல நடிக்கபோகிறார் என்ற ரசிகர்களின் கேள்விக்கு விடை கிடைக்கும் வகையில் தற்போது புதிய செய்தி ஒன்று தெரிகிறது.
அதன்படி அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் என ஹிட் படங்களை கொடுத்த விஷ்ணுவரதன் இயக்கத்தில் அஜித் அடுத்து நடிக்கபோவதாக தகவல்கள் வெளிவந்தன. இந்த செய்தி ரசிகர்களிடையே பெரிய சந்தோசத்தை வரவைத்துள்ளது.
source : dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்