ஆஸி. டெஸ்ட்: கம்மின்ஸ்,ஸ்டார்க் வேகபந்தில் சரிந்த பாகிஸ்தான்..!

Default Image

பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது.தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றனர்.இன்று முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இதைத்தொடர்ந்து  பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஷான் மசூத் , அசார் அலி  இருவரும் இறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினர்.
நிதானமாக விளையாடிய ஷான் மசூத் 27 ரன்னில் வெளியேற  ,பின்னர் இறங்கிய ஹரிஸ் சோஹைல் 1 ரன் எடுத்து விக்கெட்டை பறிக்கொடுத்தார்.இதைதொடந்து ஆசாத் ஷபிக் நிலைத்து நின்று 76ரன்கள் அடித்தார்.
பாகிஸ்தான் அணியின் நட்சித்திர வீரர் பாபர் ஆசாம் 1 ரன் எடுத்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.மத்தியில் இறங்கிய விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 37 ரன் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினார்.
இறுதியாக பாகிஸ்தான் அணி 240 ரன்னிற்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. ஆஸ்திரேலியா அணி சார்பில் ஸ்டார்க்  4 , கம்மின்ஸ் 3 விக்கெட்டையும் பறித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்