தினமும் உடலும் மனதும் சுறுசுறுப்பாக செயல்பட என்னவெல்லாம் சாப்பிடவேண்டும்?!
நமது உடல் புத்துணர்ச்சி பெறவும் நான் நமது அன்றைய நாள் சுறுசுறுப்பாக அமையவும் நமது உணவில் புரதச்சத்துக்கள் நிறைந்த உணவுகளாக எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த உணவுகள்தான் சிறுதானியங்கள், கம்பு, கேழ்வரகு, போன்ற உணவுகள். இதனை நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நமது முன்னோர்கள் இவற்றையெல்லாம் சேர்த்துக் கொண்டால் தான் அவர்கள் தற்போதுவரை இயற்கை மரணத்தில் பெரும்பாலானோர் இறக்கிறார்கள். ஆனால், நாமோ புது விதமான நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறோம்.
சிறுதானியங்களில் முக்கியமானது வரகு. இந்த வரகானது சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நமது முன்னோர்கள் சாப்பிட்டு வந்துள்ளனர். வரகில் புரதச் சத்து அதிகமாக உள்ளது. மேலும், இவை எளிதில் நம் ரத்தத்தில் கலந்து சத்துக்களை ரத்தத்தில் கலந்து விடும். மூளை நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
நம் ரத்தத்தின் அடர்த்தியை குறைத்து உயர் ரத்த அழுத்தம் வராமல் தடுக்கும். நமது உடலில் செல் இழப்பை கட்டுப்படுத்தும். தேவையற்ற நச்சுக்களை அழித்துவிடும். மூட்டுவலி வரவே வராது. கண்பார்வை தெளிவாக தெரியும். இன்னும் நிறைய சத்துக்கள் இந்த வரகில் உள்ளது. நாம் உண்ணும் உணவில் அரிசியை குறைத்து தானியங்களை சேர்த்துக்கொண்டாலே நாம் நோயற்ற ஆரோக்கிய வாழ்வை வாழலாம்.