இந்திய சுதந்திரத்தின் அகிம்சை மன்னன் மகாத்மா காந்தியடிகளின் 71வது நினைவுநாள்!

Default Image

 
தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 71வது நினைவுநாள் நாடுமுழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது.மகாத்மா காந்தியின் 71-வது நினைவு நாளையொட்டி   ஆளுநர்  பன்வாரிலால்  புரோகித் மலர் தூவி மரியாதை செலுத்தினார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
 
நாட்டின் விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்ட அந்த மாமனிதரை சற்றே நினைவுகூர்வோம்:
சாத்வீக வழிப் போராட்டங்களால் நாட்டின் விடுதலைக்கு வித்திட்டவர் மகாத்மா. ஜெய்ஹிந்த் எனக் குரல் எழுப்பியவர்களை அடித்து, உதைத்தும், சிறையில் அடைத்தும், வந்தே மாதரம் என முழங்கியவர்களைத் துப்பாக்கி ஏந்திய முரட்டுக் கரங்களால் அடக்கி ஒடுக்கிய ஆங்கிலேயர்கள், காந்தியின் அறவழிப் போராட்டத்தால் மிரண்டனர்.
Image result for mahatma gandhi
காந்தியக் கொள்கைகளை நிராகரித்துவந்த தேசிய நாயகன் நேதாஜி, காந்தியின் போராட்ட வலிமையையும், விடுதலைக்காக அவரின் பின்னே அணிவகுத்து நின்ற மக்கள் சக்தியையும் கண்டு, தேசத்தந்தை என்று அழைத்தது சாத்விகப் போராட்டங்களுக்கான அங்கீகாரம்…
அகிம்சையை நேசித்து, ஆணவத்தை எதிர்த்து, சத்தியத்தைக் கடைப்பிடித்து இந்த மண்ணில் வாழ்ந்து மடிந்த அவர், இன்றும் சரித்திரமாய் நிற்கின்றார். கடல்கடந்து, காலம் கடந்து, இனம், மொழி, மதம் என எல்லாவற்றையும் கடந்து உலகின் வழிகாட்டியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார் அண்ணல் காந்தி…
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள் ….

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest