விண்ணில்14 செயற்கைக் கோள் உடன் பறக்க உள்ள பிஎஸ்எல்வி- சி 47 ராக்கெட்..!

Default Image

ஆந்திர மாநிலம்  ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் என்ற விண்வெளி மையத்தில் இருந்து வரும் 25-ம் தேதி காலை 09 .25 மணிக்கு பிஎஸ்எல்வி- சி47 ராக்கெட் ஏவப்பட்ட உள்ளது.
இந்த ராக்கெட்டில் மொத்தம் 14 செயற்கைக்கோள்கள் வைத்து அனுப்ப உள்ளன. அதில் இந்தியாவுக்கு சொந்தமான கார்டோசாட்-3 செயற்கைக்கோள் மற்றும் 13 நானோ  வகை செயற்கைக்கோள்கள் அனுப்புகின்றன.
Image
அந்த 13 செயற்கைக்கோள்களும்  அமெரிக்காவுக்கு சொந்தமானது. இந்த கார்டோசாட்-3 செயற்கைக்கோள் துல்லியமான படங்களை அனுப்பும் திறன் கொண்டது. புவி சுற்று வட்டப்பாதையில் 509 கிலோ மீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது.இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவும் 74-வது ராக்கெட் இதுவாகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்