அமெரிக்காவில் படிக்க ஆர்வம் காட்டி வரும் இந்திய மாணவர்கள்! உலக அளவில் இரண்டாமிடம்!
வெளிநாடுகளில் கல்வி பயில இந்திய மாணவர்களிடையே அதிக ஆர்வம் உள்ளது. அதிலும் குறிப்பாக வெளிநாடு சென்று படிக்க அமெரிக்கா பெரும்பாலானோர் தேர்வாக இருக்கிறது. அமெரிக்காவில் பயிலும் சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கை பற்றி அமெரிக்க ‘ சர்வதேச கல்வி பரிமாற்றம்.’ எனும் அமைப்பு ஆய்வு நடத்தியுள்ளது.
அதில், அமெரிக்க வந்து படிக்கும் சர்வதேச மாணவர்களில் அதிகமான இடங்களை பெற்றவர்கள் சீனா நாட்டு மாணாவர்கள்தான். அதிலும் தொடர்ந்து 10 ஆண்டுகளாக சீனா முதலிடத்தில் உள்ளது.
இதில், இரண்டாமிடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் இருந்து 2.05 மாணவர்கள் சென்றாண்டு அமெரிக்கா சென்று படித்து வருகின்றனர்.
மற்ற நாடுகளில் இருந்து அமெரிக்க சென்று படிப்பதால், கடைசியாக 3.2 லட்சம் கோடி நிதி அமெரிக்காவிற்கு கிடைத்துள்ளது.