முரசொலி விவகாரம் : புகார் அளித்தவரிடம் ஆதாரம் எதுவும் இல்லை -ஆர்.எஸ்.பாரதி

Default Image

முரசொலி நில விவகாரத்தில் ஆவணங்களை தர மாநில அரசு அவகாசம் கேட்டுள்ளது என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அசுரன் படத்தை பார்த்துவிட்டு பஞ்சமி நிலம் குறித்து கருத்து கூறியிருந்தார்.ஸ்டாலின் கருத்து தெரிவித்ததில் இருந்து பஞ்சமி நிலம் குறித்த விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த சமயத்தில்  பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் உள்ளது என்று பாஜகவை சேர்ந்த சீனிவாசன் தேசிய தாழ்த்தபட்டோர் ஆணையத்தில் புகார் அளித்தார். பின்பு முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் உதயநிதி ஸ்டாலினுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.அதாவது இன்று   உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.ஆனால் உதயநிதிக்கு பதிலாக திமுகவின் அமைப்பு செயலாளரும் ,முரசொலியின் அறங்காவலருமான ஆர்.எஸ்.பாரதி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
விளக்கம் அளித்த பின்னர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தலைமை செயலாளர் சண்முகமும் அவகாசம் கேட்டுள்ளார்.முரசொலி நிலம் தொடர்பாக எங்களிடம் உரிய ஆவணங்கள் உள்ளது.புகார் அளித்த சீனிவாசனிடம் முரசொலி இடம் பஞ்சமி நிலம் என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.
முரசொலி விவகாரத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையர் தலையிட உரிமையில்லை.இடைக்கால அறிக்கை தர இருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. எங்களிடம் உள்ள ஆதாரங்களை விசாரணை ஆணையத்திடம் அளித்துள்ளோம்.அரசிடம் இருக்கும் ஆவணங்கள் குறித்தும் கேட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.மேலும் மு.க.ஸ்டாலினின் அரசியல் பிடிக்காமல் சிலர் அவதூறு பரப்புவதாகவும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்