நடைபாதைகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற வேண்டும்! – மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய இடங்களில் உள்ள நடைபாதைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சிறிய கடைகளும், வாகன ஓட்டிகளும் அக்கிரமித்துள்ளதாகவும், அதனை அகற்ற கோரியும் டிராபிக் ராமசாமி உள்ளிட்ட சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
நடைபாதை ஆக்கிரமிப்பு தொடர்பான அத்தனை வழக்குகளையும் இன்று உயர்நீதிமன்ற நீதிபதி ஒன்றாக விசாரித்தார், அப்போது , சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட நடைபாதைகளில் இருக்கும் வாகனங்களை முதலில் முற்றிலுமாக அகற்ற வேண்டும் எனவும், அதனை தொடர்ந்து நடைபாதையில் உள்ள கடைகளின் எண்ணிக்க்கை பற்றியும் முழு விவரமும் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் எனவும் மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.