தூங்காமல் வேலை செய்பவர்களா நீங்கள்? அப்ப உங்களுக்காக தான் இந்த பதிவு!
கடுமையாக உழைக்க வேண்டும் என, இரவு பகல் பாராமல் கடுமையாக உழைப்பவர்கள் அதிகமாக உள்ளனர். இதனால் அவர்களுக்கு ஏற்படக் கூடிய ஆபத்துக்களை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. இது நமது உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், மனநிலையையும் பாதிக்கிறது.
கோபம்
ஒரு மனிதன் தினசரி 7 மணி நேரமாவது தூங்க வேண்டும். இந்த தூக்கம் குறையும் பட்சத்தில் குண நலன்களில் கூட மாற்றம் ஏற்படுவதாக ஆய்வில் கூறுகின்றனர். சரியான தூக்கம் இல்லாத நபர்கள் அனைவரும் பொதுவாக முற்கோபிகளாக தான் இருப்பார்களாம்.
கவனக்குறைவு
சரியான தூக்கம் இல்ல்லாததால், நமது மூளையின் சுறுசுறுப்பு தன்மை குறைந்து, வேளையிலும் சரி, கல்வி கற்கும் இடங்களிலும் சரி கவன குறைவு ஏற்படுகிறது. நீண்ட நேரம் ஒரு செயலில் கவனம் செலுத்துவது கடினமாக மாறிவிடுகிறது.
விபத்துகள்
இரவு நேரங்களில் தூங்காமல், வாகனங்களை ஓட்டுவதால், வாகனத்தை ஒட்டி கொண்டு இருக்கும் போது, தூக்கம் வராகி கூடும். இதனால், உயிரை பறிக்க கூடிய ஆபத்துகளும் ஏற்பட கூடும்.
எனவே நமது உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் கருத்தில் கொண்டு, சரியான நேரத்திற்கு தூங்கி, சரியான நேரத்திற்கு உறங்க வேண்டும். இது தான் நமது ஆரோக்கியத்தை மேம்படும்.