கல்லூரி மாணவிகளின் கலகலப்பை பார்ப்பதற்காக ட்ரைவர் செய்த செயல்! இறுதியில் டிரைவருக்கு நடந்த விபரீதம்!
கேரளாவில், கல்பேட்டா பகுதியில், இயங்கும் தனியார் பேருந்து ஒன்றில், ட்ரைவர் வண்டி ஒட்டி வருகிறார். அவரை சுற்றி கல்லூரி மாணவர்கள் மாடர்னாக உடையணிந்து நிற்கின்றனர். மேலும், சிலர் அவருக்கு நெருக்கமாக அமர்ந்துள்ளனர். இந்த ஓட்டும் டிரைவரின் பெயர் ஷாஜி (35).
அப்போது அந்த பேருந்தில் காந்த கண்ணழகி பாடல் ஓடியுள்ளது. இந்த பாட்டிற்கு ஏற்ப அவரை சுற்றி உள்ள கல்லூரி மாணவிகள் கியரை மாற்றுகின்றனர். அவர்களை மாற்ற சொல்லி அவர்களின், சிரிப்பொலியை ரசித்து வந்துள்ளார் ஷாஜி.
இதனையடுத்து, அந்த பேருந்தில் பயணம் ஒருவர் இவர்களது இந்த செயலை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டனர். இந்த வீடியோவை பார்த்த இணையதள வாசிகள் இவருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கடைசியில், இந்த வீடியோ ஆர்டிஓ பார்வைக்கு செல்ல, உடனடி விசாரணை மேற்கொண்ட அவர், டிரைவர் ஷாஜியை 6 மாசம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.