தனது நண்பன் உயிரிழந்தது தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்த இளைஞர்கள்!
கர்நாடகாவில் கல்புர்கி மாவட்டம், ஜாப் பரிதாபாத் பகுதியை சேர்ந்த இளைஞர்களில் சிலர், மிஜ்குரி என்ற இடத்தில, கல்குவாரியில் தேங்கியுள்ள நீரில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். நண்பர்களாக சென்ற இவர்கள், நண்பர்கள் நீச்சலடிப்பதை, ஒருவர் செல்போனில் படம் பிடித்துக் கொண்டு இருந்துள்ளார்.
இதில் முதன்முதலாக நீந்திய இளைஞர் கரையேறி விட்டார். அடுத்ததாக ஜாபர் என்பவர் நீரில் குதித்து, நீந்தியுள்ளார். அவர் கரைக்கு அருகே வரும்போது, சமநிலை தவறியதால் ஜாபர் நீந்த முடியாமல் நீந்த துவங்கியுள்ளார்.
ஜாபர் நீரில் மூழ்கி போவது கூட தெரியாமல், அவரது நண்பர் செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டு இருந்துள்ளார். இந்த விளையாட்டு தனத்தால், ஜாபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.