அதிமுக அரசை கண்டித்து..! 5 மாவட்டங்களில் திமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..!
தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதி குறுக்கே கர்நாடக அரசு 50 மீட்டர் உயரத்தில் அணை கட்டி வருகிறது.அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
’தலைமைக்கழக அறிவிப்பு’
தென் பெண்ணையாற்றில் கர்நாடக அரசின் திட்டங்களை தடுக்காமல், தோல்வி கண்டுள்ள அதிமுக அரசை கண்டித்து, 21-11-2019 அன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.#dmk pic.twitter.com/fTABOxQKgJ— DMK (@arivalayam) November 18, 2019
கடந்த 14-ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி லலித் தலைமையிலான அமர்வில் தமிழக அரசின் வழக்கு விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த அமர்வு தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் கர்நாடக அரசு அணைக்கட்டவும் அனுமதி கொடுத்தது.
இந்நிலையில் தென்பெண்ணை ஆற்றின் வழக்கு தொடர்பாக திமுக தலைமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.அதில் “தென் பெண்ணையாற்றில் கர்நாடக அரசின் திட்டங்களை தடுக்காமல் அதிமுக தோல்வியை கண்டதாகவும் ,அதை கண்டித்து தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரி , தர்மபுரி , திருவண்ணாமலை , கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வருகின்ற 21-ம் தேதி திமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்ட உள்ளது.