காஷ்மீரில் கடுமையான பனிபொழிவால் பாதிக்கப்படும் ஆப்பிள் விளைச்சல்! கவலையில் விவசாயிகள்!

நாம் அனைவரும் காஷ்மீர் என்றாலே உடனடியாக நினைப்பது பனிப்பொழிவை தான். காஷ்மீரின் சிறப்பு அம்சம் என்னவென்றால், அது ஆப்பிள்கள் தான். காஸ்மீரில் விளையும் ஆப்பிள்களின் சுவையே தனித்தன்மையுடன் காணப்படும்.
இந்நிலையில், காஷ்மீரில் புல்வாமா மற்றும் சோஃபியான் மாவட்டங்களில், இதுவரை இல்லாத பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் அங்குள்ள ஆப்பிள் மரங்களில் பனி படர்ந்திருப்பதால், பனிபொழிவின் எடையை தாங்க முடியாமல், ஆப்பிள் மரங்களின் கிளைகள் உடைந்து விழுகின்றன.
ஆப்பிள் விளைச்சலில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்னை விவசாயிகளை பெரிதளவில் பாதித்துள்ளது. இதுவரையில், இந்த பனிபொழிவின் காரணமாக 70 சதவிகித ஆப்பிள் விளைச்சல்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றன.
இந்நிலையில், முறிந்த மரங்கள் குறித்த அறிக்கையை தயாரித்து, மத்திய அரசிடம் நிவாரண உதவி கேட்கப்படும் என தோட்டக்கலை துறை தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025