கோத்தபய ராஜபக்சேவுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி!

இலங்கையில் 8 வது அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இலங்கையில் நேற்று முன்தினம் தொடக்கி நடந்து வருகிறது. இந்த தேர்தலில் 35 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இவர்களில் பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் கோத்தபாயா ராஜபக்சேவுக்கும், ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சுஜித் பிரேமதாசாவுக்கும் இடையே கடும் போட்டி
நிலவியது.
இந்நிலையில், அதிக வாக்குகள் பெற்ற கோத்தபாய ராஜபக்சே தான் வெற்றி பெற்றதாக அவராகவே அறிவித்திருந்தார். ஆனால், வெற்றிபெற்றவரை மாலை அறிவிப்போம் என ஆணையர் கூறியிருந்தார். இதற்கிடையில், மக்களின் தீர்ப்பையே நானும் ஏற்கிறேன் என கூறி ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சுஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
இந்நிலையில்,  மோடி, வெற்றி பெற்ற கோத்தபாய ராஜபக்சேவுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், இரு நாட்டுக்கு இடையில் அமைதி, வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு மேம்பட தொடர்ந்து உழைப்போம் எனவும், தேர்தலை அமைதியாக நடத்திய வாக்காளர்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.  பதிவு,

author avatar
Rebekal