டிரம்புக்காக காத்திருக்கிறார்களா டுவிட்டர் வாசிகள்?படுத்துக்கொண்டே ட்வீட் போடும் ட்ரம்ப்….
சர்ச்சைக்குரிய கருத்துக்கு பெயர் போனவர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.இந்நிலையில் அவர் அவரது டுவிட் குறித்து கருத்து ஓன்று தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் மூலம் கருத்துக்கள் தெரிவிப்பதையும், கொள்கைகளை அறிவிப்பதையும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் பிரிட்டிஷ் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவர், உலகில் ஏராளமானோர் தன்னுடைய டுவீட்களைப் படிப்பதற்காக ஏங்கிக் கிடப்பதாகவும், சில நேரங்களில் தான் படுக்கையில் இருந்தவாறே டுவீட் செய்வதாகவும் தெரிவித்தார்.
அதிபர் தேர்தலின்போது ஊடகங்கள் தனக்கு எதிராகப் பொய்ச்செய்திகளை வெளியிட்ட நேரத்தில், சமூக ஊடகங்கள் வாயிலாகவே தான் வாக்காளர்களைத் தொடர்புகொண்டதாகவும் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகின் தரமான சமையலர்களால் சமைக்கப்பட்ட சத்தான உணவைத் தான் உண்பதாகவும் அந்தப் பேட்டியில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இனைந்திருங்கள்….