ராஜஸ்தானில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 10 பேர் பலி!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிகானர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ தங்கர்கர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை மக்களை ஏற்றிக்கொண்டு ஒரு பேருந்து சென்றுள்ளது. அப்பொழுது, அதே பாதையில் ஒரு லாரியும் வந்துள்ளது. எதிர்பாராத விதமாக மோதிக்கொண்ட லாரி மற்றும் பேருந்து தீ பிடிக்கும் அளவிற்கு மோதிக்கொண்டுள்ளன.
இதனால் உள்ளிருந்த பயணிகள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. பலர் தங்களது கை, கால்கள் இழந்த நிலையில், சிதைந்து கிடந்துள்ளனர். உடனடியாக தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் உயிருக்கு போராடிய மக்கள் அனைவரையும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
ஆனால், துரதிஷ்டவசமாக அதில், 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 25 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தால் சற்று நேரம் அந்த பகுதியில் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டுள்ளது. அதன் பின்பு, பொக்லைன் இயந்திரங்கள் மூலம் வாகனங்கள் அகற்றப்பட்டு, போக்குவரத்துக்கு சரி செய்யப்பட்டுள்ளது.