இவரை காணவில்லை! கடைசியாக ஜிலேபி சாப்பிட்டு கொண்டிருந்தார்! டெல்லியில் கம்பீர்ருக்கு ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு !

Default Image

டெல்லியில் ஏற்பட்டுள்ள கடுமையான காற்று மாசு காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். காற்று மாசினால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து செல்கின்றனர். இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளிலும் அரசு ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், காற்று மாசு குறித்து விவாதிப்பதற்காக, நாடாளுமன்ற கமிட்டியின் கூட்டம் 15-ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு 29 எம்.பி-களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இந்த கூட்டத்தில் 4 எம்.பிக்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இதனையடுத்து, டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு குறித்து, கெஜ்ரிவால் அரசை கடுமையாக விமர்சனம் செய்த கவுதம் கம்பீருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வில்லை. இக்கூட்டம் நடைபெற்ற போது, கவுதம் கம்பீர் வங்கதேசத்துக்கு எதிரான இந்திய அணி டெஸ்ட் போட்டிக்கு வர்ணனனையாளராக சென்றுள்ளார்.
இவரது இந்த செயலால் சமூக வலைத்தளங்களில் இவருக்கு எதிரான ஹேஸ்டேக்குகள் பதிவிடப்பட்டது. மேலும், மக்கள் பிரச்னை தொடர்பான கூட்டத்தில் கலந்து கொள்ளாமல், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது கண்டத்திற்குரியது என்று கூறி பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இதனையடுத்து, டெல்லி ஐடிஓ பகுதியில், ‘இவரை காணவில்லை யாராவது பார்த்தீர்களா? என்ற வாசகத்துடன், அவரது புகைபபடத்தையும் அச்சிட்டு போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்