இந்தியன்-2 உலகநாயகன் பற்றி சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த இயக்குனர் ஷங்கர்!
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தற்போது தயாராகி வரும் திரைப்படம் இந்தியன்-2. இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், காஜல்அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பிரியா பவானிசங்கர் என பலர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று கமலஹாசனின் பாராட்டு விழாவில் பங்கேற்ற இயக்குநர் சங்கர் கூறுகையில், ‘ இந்தியன் திரைப்படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் குஜராத் மொழியில் பேசி நடித்துள்ளார்.’ என்ற தகவலை வெளியிட்டார்.
இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.