சென்னையில் கொள்ளையார்களை பிடித்து கொடுத்தவர்கள் மீது தடியடி ..!
சென்னை அடுத்த கூடுவாஞ்சேரி அருகில் உள்ள மடப்பாக்கம் வள்ளலார் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு இளைஞர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது அப்பகுதி மக்கள் அந்த இரண்டு இளைஞர்களை மடக்கி பிடித்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து வந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களையும் மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்றனர்.இதை தொடர்ந்து சம்பவ இடத்தில் குவிந்து இருந்த பொதுமக்களை கலந்து செல்லுமாறு காவல்துறையினர் கூறியுள்ளனர்.
ஆனால் பொதுமக்கள் கலைந்து செல்லாததால் போலீசார் திடீரென தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.