உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனு..!
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என தீர்ப்பளித்தது.மேலும் இஸ்லாமியர்கள் மசூதி கட்டஅவர்கள் கேட்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் தரவேண்டும் என கூறியது.
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்தின் தலைவர் மவுலானா வாலி ரஹ்மானி தலைமையில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்பதா அல்லது மறுசீராய்வு மனு தாக்கல் செய்வதா என ஆலோசனை நடைபெற்றது.இறுதியாக கூட்டம் முடிவில் அயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவெடுக்கப்பட்டது. விரைவில் மனு தயார் செய்து தாக்கல் செய்ய உள்ளனர்.