புனேவுக்கு விமானம் ரத்து ..! சாலை வழியாக சென்ற பயணிகள்..!
அலையன்ஸ் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஓன்று ஹைதராபாத்தில் இருந்து நாசிக் வழியாக புனேவுக்கு காலை 9.30 மணிக்கு வருவது வழக்கம்.
விமானம் வழக்கமாக காலை 8 மணிக்கு நாசிக் வந்தபிறகு காலை 9.30 மணியளவில் புனேவை சென்றடையும்.ஆனால் நேற்று இந்த விமானம் ஹைதராபாத்தில் தாமதமாக புறப்பட்டு காலை 10 மணிக்கு நாசிக் வந்தது. அப்போது விமானிகளுக்கு ஒரு அறிவிப்பு கொடுக்கப்பட்டது. அதாவது புனே விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதை பராமரிப்புக்காக மூடப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
புனே விமான நிலையத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஓடுபாதை பராமரிப்புக்காக காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரைமூடப்படும் அப்போது எந்த விமான தரையிறங்க அனுமதிக்கப்படாது.
இந்நிலையில் விமானம் ரத்து செய்யப்பட்டதைதொடர்ந்து மொத்தம் 28 பயணிகளில் 18 பேர் சாலை வழியாக புனேவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.