இலங்கை அதிபர் தேர்தல் : கோத்தபய ராஜபக்ச முன்னிலை
இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் கோத்தபய ராஜபக்சே முன்னிலை பெற்றுள்ளார்.
இலங்கையில் 8-வது அதிபரை தேர்வு செய்வதற்கான அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது .காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது.வாக்குப்பதிவு முடிந்த நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் புதிய ஜனநாயக கட்சியை சேர்ந்த சஜித் பிரேமதாச மற்றும் இலங்கை பொதுஜன முன்னணி சார்பில் கோத்தபய ராஜபக்ச ஆகியோர் போட்டியிடுகின்றனர்.வாக்கு எண்ணிக்கையில் ஜித், கோத்தபய மாறி மாறி முன்னிலை பெற்றுவருகின்றனர். தற்போதைய நிலவரப்படி சஜித்தை விட கோத்தபய ராஜபக்சே 37,285 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.