உள்ளாட்சி தேர்தலில் திமுக உடன் மதிமுக கூட்டணி தொடரும் – வைகோ
உள்ளாட்சி தேர்தலில் திமுக உடன் மதிமுக கூட்டணி தொடரும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,நீர்மேலான்மை விசயத்தில் தமிழக அரசு குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது . கர்நாடகம் தென்பெண்ணையில் 70 சதவீத அணை கட்டும் பணிகளை முடித்துவிட்டது. இது குறித்து தமிழக அரசு தீர்பாயத்தை அனுகாதது ஏன் என நீதிமன்றமே கேள்வி எழுப்பியது
அது போல மேகதாது, ஹைட்ரோ கார்பன் என பல பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலை நிறுத்த அதிமுக வேண்டுமானால் முயற்சி செய்யும், ஆனால் திமுக அந்த முயற்சி ஈடுபடவில்லை . மேலும் உள்ளாட்சி தேர்தலில் திமுக உடன் மதிமுக கூட்டணி தொடரும் என்று தெரிவித்தார்.