அமமுகவிற்கு எதிராக பேசி வந்த புகழேந்தி ! புதிய கர்நாடக மாநில செயலாளரை நியமனம் செய்த தினகரன்
கர்நாடக மாநில செயலாளராக இருந்த புகழேந்தி அமமுகவிற்கு எதிராக பேசி வந்த நிலையில் தற்போது புதிய மாநில செயலாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அமமுகவின் கர்நாடக மாநில செயலாளராக இருந்த புகழேந்தி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வந்தது.இந்த வீடியோவில் தினகரனுக்கு முகவரி அளித்தது நான் தான் என்று தெரிவித்தார்.இந்த சம்பவம் அமமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தினகரன் மற்றும் புகழேந்தி இருவருக்கும் இடையே கருத்து மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது.
கர்நாடக மாநில செயலாளராக இருந்த புகழேந்தி அமமுகவிற்கு எதிராக பேசி வந்த நிலையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதாவது கர்நாடக மாநில அமமுக செயலாளராக எம்.பி.சம்பத் நியமனம் செய்து டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.