சபரிமலை ஐயப்பன் தரிசனத்திற்கு வந்த 10 பெண்கள் கேரள போலீசாரால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்!

Default Image

கேரள சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று மணடலபூஜைக்காக நடை திறக்கப்பட்டது. இதனை அடுத்து, இன்று பக்தர்கள் கூட்டம் சபரிமலையில் அதிகமாக இருந்தது. இன்று முதல் மகர ஜோதி தரிசனம் வரையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு மீதான தீர்ப்பு 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்றப்பட்டதால், ஏற்கனவே உள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பான அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்கிற நிலை தொடருகிறது.
இதனையடுத்து இன்று முதல் நாளே ஆந்திராவை சேர்ந்த 10 நடுத்தர வயது பெண்கள் ஐயப்பனை தரிசிக்க சென்றனர். ஆனால் அவர்களிடம் கேரள போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி திருப்பி அனுப்பி வைத்தனர்.
கேரளா மாநிலம் தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில், ‘ சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வரும் அனைத்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது. நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி வரும் பெண்களுக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்க முடியும் என கூறியுள்ளார். மேலும், புரட்சி செய்வதற்கான இடம் சபரிமலை இல்லை  எனவும் தனது கருத்தை தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்